நாய் ......நன்றியுள்ள மிருகம்.மனிதன் நன்றிகெட்ட மிருகம் என்று அர்த்தமல்ல....ஆனால் அவனை அப்படி யாரும் சொன்னதில்லை என்பதிலிருந்தே நாயின் உயர்வு புரிகிறது;நமக்கும் சற்று உறைக்கிறது.
மேலும் நன்றிமறந்த மனிதனையும் ''நன்றிகெட்ட நாய்'' என்றுதான் சொல்கிறோமே தவிர நன்றிகெட்ட மனிதன் என்று அல்ல.
அதுபோல் சண்டைகள் ஏற்பட்டால் கண்ட கண்ட நாய்க்கெல்லாம் நான் பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை என்றுதான் சொல்கிறார்களே அன்றி ''மனிதனுக்கெல்லாம் '' என்று அல்ல.
எனவே இவ்வாறான சிறப்புக்கள் பெற்ற நாய் பற்றிய சில தகவல்களை பார்ப்போம்.
நாயின் விஞ்ஞானப்பெயர் canis lupus என்பது.ஏறக்குறைய 13 வருடங்கள் ஆயுட்காலம் கொண்ட நாய் ஒரு நாளைக்கு 10 மணித்தியாலங்கள் உறங்கும்.
உலகில் சுமார் 700 மில்லியன் நாய்கள் வாழ்வதாக கண்டறியப்பட்டுள்ளது.இதில் 50 வகையான நாய் இனங்கள் பிரதானமாக உள்ளன.
நாய் மனிதனுக்கு செய்யும் உதவிகள் சொல்லி மாளாது.வேட்டையாட,மந்தை மேய்க்க ,பொருட்கள் தூக்க,பாதுகாப்பாளனாக,police ராணுவத்துக்கு உதவுவோனாக,ஊனமுற்றோர்களின் வலதுகரமாக என்று தன் வாழ்க்கையே மனிதனுக்காக அர்ப்பணித்துள்ளது.
நமக்கெல்லாம் மூதாதையர் குரங்கு போல் நாய்களின் மூதாதையர்கள் வேறு யார் நம்ம நரியார்தான்.
''கல்லைக்கண்டால் நாயைக்காணோம் நாயைக்கண்டால் கல்லைக்காணோம் ''என்று நாம் சொல்லிக்கொண்டிருக்க அவர்கள் நாய்க்காகவே ஹோட்டல் எல்லாம் திறக்கிறார்கள்.இங்கே திருமணம் கூட நடத்தி வைக்கிறார்கள்.நாய்க்கு இருக்கும் மதிப்பு கூட மனிதனுக்கு இல்லை.நாய்க்கும் கேவலமாக மனிதன் ஆகிறான்.
மேலும் ,மிகப்பெரிய நாயாக english mastiff விளங்குகிறது. இதன் நிறை 155.6 kg என்பதுடன் நீளம் 250 cm ஆகும்.மிக சிறிய நாய் york shire terrier.இதன் நிறை 113 கிராம்.
இவ்வாறெல்லாம் சிறப்புக்கள் கொண்ட-விண்வெளிக்கே சென்று வந்த- நாயை கேவலப்படுத்தும் விதமாக சில நாய்கள்-மன்னிக்கவும்-சில மனிதர்கள் பேசுவதை கண்டால் கடித்து குதறலாம் போல் இருப்பது தவிர்க்க முடியாதது.
வவ் வவ் .....(நன்றி...)