Sunday, October 26, 2014

பொய் சொல்பவரை கண்டுபிடிப்பது எப்படி?

இன்றைய உலகில் பொய் மெய்யாகவும் மெய் பொய்யாகவும் மாறியுள்ளது என்பது பொய்யல்ல.




ஆகவே ஒருவர் உண்மையை சொல்கிறாரா அல்லது பொய் சொல்கிறாரா என்பதை அறிந்து கொள்ள வேண்டியது நம் உடலுக்கும் உளத்துக்கும் நல்லது.

பொய்யர்களின் கதையை நம்பி மெய்யை ( உடல்) புண்ணாக்கியவர்கள்தான்  உலகில் அதிகம்.




பொய் சொன்ன வாய்க்கு பொரியும் கிடையாது என்பதை பொய்யாக்கி பொய் சொன்னால்தான் எரியும் அடுப்பு என்பதை மெய்யாக்கியவர்களும் உலகில் அதிகம்.

என்றாலும் முதலில் யார் முதலில் வருவது என்பது  முக்கியமல்ல ; இறுதியில் யார் முதலில் வருகிறார்கள் என்பதுதான் முக்கியம். அந்த வகையில் இறுதியில் வெல்வது என்னவோ மெய்தான்.

ஆகவேதான் இந்த பொய்யை மெய்யாக்கும் பொய்யர்களை கண்டுபிடிப்பது எப்படி? என்கிற இந்த ஆய்வு முடிவுகள் முக்கியமாகின்றது.

உடல் மொழி மூலம் இவர்களை அடையாளம் காணலாம்.என்று கண்டுபிடித்துள்ளார்கள்.

அறிகுறிகள்.

1. இவர்கள் நேருக்கு நேர் கண்ணோடு கண் பார்த்து கதைக்க மாட்டார்கள்.
2. முகம் அல்லது கழுத்து அல்லது வாயை தொட்டுக்கொண்டு பேசுதல்.
3. உணர்ச்சியை உடனே வெளியிடாமை .
4. உணர்ச்சிக்கும் சொல்லும் சொல்லுக்கும் இடையே வேறுபாடு காணப்படல்.
5. பொய் சொல்பவர் எப்போதும் எதிர் தாக்குதலுக்கு தயாராகவே இருப்பார்.(சொல் அல்லது உடல் )
6. நாம் கேட்கும் கேள்வியையே பதிலாக மாற்றி கூறுவார்கள்.உதாரணம் நீ இந்த பிஸ்கட்டை எடுத்தாயா? என்று கேட்டால் நான் அந்த பிஸ்கட்டை எடுக்கவில்லை என்று கூறல்.
7. பெரும்பாலும் நேரடியாக பதில் சொல்லமாட்டார்கள்.
8. அதிகம் கதைக்க மாட்டார்கள்.அல்லது தவிர்ப்பார்கள்.



எனவே இவ்வாறான அறிகுறிகளை வைத்து பொய் சொல்பவரை இனம் காணுவோமாக.........